2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’15இல் இருந்து நெல் கொள்வனவு’

Niroshini   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில், இம்மாதம் 15ஆம் திகதியில் இருந்து நெல் கொள்வனவை ஆரம்பிப்பதாக, நெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளதென்று,   மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
 
மன்னார் மாவட்டச் செயலகத்தில், நேற்று (10) மாலை நடைபெற்ற நெல் கொள்வனவு தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக்  கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர்  இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், இம்முறை 21 ஆயிரத்து 546 ஏக்கர் ஹெக்டெயரில் நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும்  இதன்மூலம் 85 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் உற்பத்தி கிடைக்கலாமென்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார் 
 
உர மானியம் பெற்றவர்களிடம் இருந்து நெல் சந்தைப்படுத்தும் சபையினர்,  குறிப்பட்டளவு நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் பணித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
 
அதன் அடிப்படையில், 1 தொடக்கம் 1.5 ஹெக்டெயர் பயிர்ச் செய்கைக்கான உர மானியத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் 1,000 கிலோகிராம் நெல்லையும்,1.5 தொடக்கம் 2 ஹெக்டெயர் பயர்ச்செய்கைக்கு உர மானியத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் 1,500 கிலோகிராம் நெல்லையும் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு  கொடுக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டச் செயலாளர் கூறினார்.
 
"சிவப்பு, வெள்ளை நாடு நெல் 14 வீத ஈரப்பதனுடன் ஒரு கிலோகிராம் 50 ரூபாய்க்கும், சிவப்பு, வெள்ளை கீரி சம்பா நெல்  14 வீத ஈரப்பதனுடன் ஒரு கிலோகிராம் 52 ரூபாய்க்கும் நெல் சந்தைப்படுத்தும் சபை  கொள்வனவு செய்வதாக தெரிவித்துள்ளது.
 
"இம்மாதம் 15ஆம் திகதியில் இருந்து நெல் கொள்வனவை ஆரம்பிப்பதாக, நெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது.   இதற்கமைய,  மருச்சிக்கட்டி மற்றும் நானாட்டான் பகுதிகளில் உள்ள நெல் களஞ்சியசாலைகளில் இருந்து திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களிலும் முருங்கன் மற்றும் மாந்தை நெல் களஞ்சியசாலைகளில் இருந்து வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களிலும் குறித்த நெல் கொள்வனவுகள் இடம்பெறும் என, நெல் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது" என, திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .