சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் சார்ப் நிறுவனம், கடந்த 16 மாத காலப்பகுதியில், 3 ஆயிரத்து 672 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்;, கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் 3 இலட்சத்து 76 ஆயிரத்து 903 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 3 ஆயிரத்து 672 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.
முன்னாள் போராளிகள் மற்றும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்கும் வகையில், இந்நிறுவனத்தில் 118 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 11 பெண் பணியாளர்களும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025