2026 மே 01, வெள்ளிக்கிழமை

17,443 வெடிபொருள்கள் அகற்றல்

Editorial   / 2019 மார்ச் 25 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பி​ரமணியம் பாஸ்கரன்

வடக்கு மாகாணத்தில், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளில், ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தால், 17,443 அபாயகரமான வெடிபொருள்கள் அகற்றப்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கெப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட  அம்பகாமம், தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலையிலும் உள்ள 764,269 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்தே, இந்த வெடிப்பொருள்களை அகற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், முகமாலை பகுதியில், கண்ணிவெடி அகற்றும் பணிகளை துரித கதியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்நிறுவனத்தில் மொத்தம் 118 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் 11 பெண் பணியாளர்கள் உள்ளடங்குவதாகவும், அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .