2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

1800 கிலோகிராம் மாட்டிறைச்சி குழிதோண்டி புதைப்பு

George   / 2017 ஜூன் 04 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

மாடுகளை திருடி, இறைச்சியாக்கி விற்பனை செய்வதற்காக கொண்டுச்சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதுன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாரியளவான மாட்டிறைச்சி, மையானத்தில் புதைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து  புத்தளத்துக்கு கொண்டு சென்ற நிலையில், கைப்பற்றப்பட்ட 1800 கிலோகிராமுக்கும் அதிகளவான மாட்டிறைச்சியே, கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து சங்குபிட்டி, பூநகரி மன்னார் ஊடாக புத்தளத்துக்கு கூலர் ரக வாகனத்தில், வெட்டப்பட்ட நிலையில் 38 மாடுகளின் இறைச்சி, தலைகளுடன் கொண்டு செல்லப்பட்டது.

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த வாகனம் சோதனையிடப்பட்டதுடன்,  சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் சந்தேகநபர்கள், கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் நேற்று முன்தினம் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இறைச்சியை கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், சந்தேகநபர்கள் இருவரையும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அதனையடுத்து, கரைச்சி பிரதேசசபை ஊழியர்கள், கனரக வாகனத்தின் மூலம், பாரிய குழியை தோண்டி புதைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .