2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

181 கி.மீ வீதிகள் ஐ - ரோட் திட்டத்தின் கீழ் புனரமைப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட 181 கிலோமீற்றர்  வீதிகள் ஐ - ரோட் திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைய இருக்கும் காப்பட்  வீதிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, கடந்த வாரம்  கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த வீதித் திட்டமானது ஐ - ரோட்  திட்டத்தினூடாக புனரமைப்பு செய்யப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்துக்கான ஆரம்பப் பணிகள் கடந்த மாதத்தில் முன்னாள் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியால் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த வீதிகளின் தெரிவுகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், ஏனைய பிரதேச சபைகளின் தவிசாளர்களால் தெரிவுசெய்யப்பட்டது.

மொத்தமாக 181 கிலோ மீற்றர்  வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

விசேடமாக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருக்கும் வலைப்பாடு - வேரவில் வீதியும் புனரமைப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X