Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2018 ஜனவரி 18 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்புக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 1958 பேர் தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்புக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 1958 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் கடந்த 12 ஆம் திகதி அஞ்சல் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முதலாம்; கட்டமாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸாருக்கு எதிர்வரும் 22 ம் திகதி வாக்கு பதிவு இடம்பெறும். ஏனையோர் 25ஆம் 26ஆம் திகதிகளில் வாக்களிக்கலாம். இவற்றில் வாக்களிக்க தவறியோர் பெப்ரவரி மாதம் 01ஆம் 02ஆம் திகதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமது வாக்கை பதிவு செய்ய முடியும்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைக்குமான தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் 72 ஆயிரத்து 961 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களுக்காக 134 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்குகளை பதிவுசெய்ய முடியும். வாக்கு எண்ணும் பணிகள் வாக்களிப்பு நிலையங்களிலேயே இடம்பெறும். எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இறுதியாக மாவட்ட செயலகத்துக்கு வாக்குகள் எடுத்துவரப்பட்டு சபைகளுக்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago