Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
இந்திய அரசின் நிதி உதவியுடன், '1990' எனும் அவசர அம்புலன்ஸ் வண்டிச் சேவை கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி வட மாகாண ரீதியில் வைபவமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட 20 அம்புலன்ஸ் வண்டிகளில், மன்னார் மாவட்டத்திற்ககென 3 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிக்கப்பட்டன.
குறித்த அம்புலன்ஸ் வண்டிகள் மன்னார் மாவட்டத்தில் மன்னார்,மாந்தை மேற்கு மற்றும் முசலி ஆகிய 3 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளன.
அத்துடன் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கான அம்புலன்ஸ் வண்டி மன்னார் பொலிஸ் நிலையத்திலும், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கான அம்புலன்ஸ் வண்டி இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்திலும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கான அம்புலன்ஸ் வண்டி சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்தும் தமது சேவைகளை மேற்கொண்டு வரப்படுகிறது.
எனினும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற மடு பிரதேசச் செயலாளர் பிரிவில், குறித்த அம்புலன்ஸ் வண்டி சேவை ஆரம்பிக்கப்படாமை தொடர்பில் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, மடு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மன்னாருக்கு வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டிகளில் ஒன்றை, மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் வைத்து சேவையினை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டுமென, மடு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
43 minute ago
56 minute ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
56 minute ago
23 Aug 2025