2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

2 கமநல சேவை நிலையங்கள் அமைக்க நடவடிக்கை

Niroshini   / 2021 செப்டெம்பர் 12 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரண்டு கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

 

இதற்கமைய, குமரபுரம், பரந்தன், உமையாள்புரம், ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, கோரக்கன்கட்டு ஆகிய 6 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில், 1,883 விவசாய குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில், பரந்தன் கமநல சேவை நிலையம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன், ஊரியான், முரசுமோட்டை, கண்டாவளை ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளை  உள்ளடக்கிய வகையில், 1,443 விவசாய குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில், கண்டாவளை கமநல சேவை நிலையத்தையும் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.   

         

         


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X