Niroshini / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வவுனியா - தாண்டிக்குளம் மற்றும் ஹொறவப்பொத்தானை வீதிகளில் அமைந்துள்ள இரண்டு தனியார் நெற்களஞ்சிய சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நாட்டிலுள்ள தனியார் நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொடர்பான தகவல்களை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கால எல்லைக்குள் வழங்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தகவல்களை வழங்காத குற்றச்சாட்டின் கீழ், இவ்விரண்டு நெற்களஞ்சிய சாலைகளும், வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் சீல் வைக்கப்பட்டன.
இதேவேளை, குறித்த களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லை, நிர்ணய விலையை செலுத்தி, நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 minute ago
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago
46 minute ago