2025 மே 08, வியாழக்கிழமை

2 மாத சிசுவுக்கும் கொரோனா தொற்று

Niroshini   / 2021 ஜூன் 08 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட  தர்மபுரம் கிராமத்தில், 2 மாத சிசுக்கு  கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (07)  மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருந்தே, இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சிசுவின் தந்தை கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றுபவர் என்றும், அவருக்கு அண்மையில் தொற்றுறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் இரண்டு மாதக் சிசுக்கு மேற்கொள்ளப்பட்ட  அண்டிஜன் பரிசோதனையில், சிசவுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், தாய்க்கு தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டது.

இருந்த போதும், அவருக்கு இருக்கும் அறிகுறிகள்,  தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை,  நேற்றைய தினம் (07) கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 14 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில், 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X