2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

குஞ்சுக்குளம் கிராமத்திற்கான பாதைகள் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (எஸ்.ஜெனி)


மன்னார் மாவட்டத்தின் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான பாதைகள் அனைத்தும் வெள்ளத்தில்  மூழ்கியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.றியாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், குஞ்சுக்குளத்திற்கான தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன், குஞ்சுக்குளம் தொங்கு பாலத்தடியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குஞ்சுக்குளம் பிரதான துருசின் நீர்மட்டம் 14.2அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இப்பாதைகளில் வெள்ளம் பாய்ந்து ஓடுவதினால் வீதிகளில் பாரிய குளிகள் ஏற்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X