2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளத்தில் மிதந்து வந்த மிதிவெடிகள் மீட்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரொமேஷ் மதுசங்க)

நொச்சிகுளம் வீதியிலிருந்து மிதிவெடிகள் இரண்டும் கைக்குண்டுகள் இரண்டும் மீட்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.

வவுனியாவில் குளங்கள் நிரம்பி பெருக்கெடுத்தமையினால் பெருந்தெருக்களில் மண் படைகள் கரைந்துகொண்டு போயுள்ளன.

நொச்சிக்குளம் வீதியிலும் இவ்வாறு மண்படைகள் கரைந்து கொண்டு போனதையடுத்தே இந்த வெடிப்பொருட்கள் வெளியில் தெரிந்துள்ளன.

இந்த மர்மப்பொருட்கள் தொடர்பில் படைத்தரப்பிற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து செயற்பட்ட படையினர் அந்த வெடிப்பொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பினால் இந்த வெடிப்பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த படையினர் மிதிவெடிகள் ஒவ்வொன்றும் 15 கிலோகிராம் என்றும் இந்த வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையினால் பாரிய அனர்தங்கள் தவிர்க்கப்பட்டன என்றும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X