2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வவுனியா வாகன விபத்து: இராணுவ வீரர் பலி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கனகராயன் குளத்திலேயே இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.

லொறியொன்று வீதியை  விட்டுவிலகி இராணுவ காவலரணில் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய குறிப்பிட்டார்.

தங்கொட்டுவ பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுண்ணாம்பு ஏற்றிச்சென்ற லொறியொன்றே இவ்வாறு விபத்தக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தையடுத்து லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X