2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இரணைமடுவின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 10 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலகங்களை சேர்ந்த கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இதன் நிமிர்த்தம் இரணைமடு குளத்தின் 11 வான் கதவுகளில் ஒரு வான் கதவு இயங்காத நிலையில் 10 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளமையினால் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மருதநகர், பன்னங்கண்டி கிராமங்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளதுடன் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் ஊரியான், முரசுமோட்டை, புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இதன் காரணமாக இதுவரை 35 குடும்பங்களை சேர்ந்த 225 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் இவர்களில் 15 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி சிவபுரம் வித்தியாலயம், முரசுமோட்டை ரோமன் கத்தோலிக்க பாடசாலை, முரசுமோட்டை ஆரம்ப பாடசாலை, முருகானந்தா ஆரம்ப பாடசாலை, புளியம்பொக்கனை நாகேந்திரம் வித்தியாலயம் என்பன நலன்புரி நிலையங்களாக செயற்படுவதற்கான எற்பாடுகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்ட அனைத்து திணைக்களங்களும் நிவாரணங்களை வழங்குவதற்கும் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X