2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இரணைமடுக் குளத்தினால் மக்களுக்கு பாதிப்பில்லை: பொறியியலாளர்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் உயர்கின்ற போதிலும் பொதுமக்களுக்கோ அன்றி விவசாயிகளுக்கோ எந்தவகையான பாதிப்புகளும் ஏற்படமாட்டாது என கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியிலாளர் இன்று இரவு அறிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்...

தற்போது இரணைமடுக் குளத்தின் பதினொரு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இந்நிலையில் குளத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகின்ற போதிலும் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

கடந்த காலங்களில் நீரின் கொள்ளளவு 30 அடியாக பேணப்பட்டது. குளத்தின் சாதாரண கொள்ளளவு 34 அடியாக இருந்த போதிலும் தற்போது குளத்தில் 32அடி 4அங்குலம் வரையில் காணப்படுகின்றது. இதனால் மக்களுக்கு எந்தவகையான பாதிப்புக்களும் ஏற்படமாட்டாது.

பொது மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி பயமடையத் தேவையில்லையெனவும்  குளத்திற்கு போதியளவு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X