2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

குஞ்சுக்குளத்தில் நடமாடும் மருத்துவ சேவை

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார், குஞ்சுக்குளம் கிராம மக்களுக்காக நடமாடும் மருத்துவ சேவை நடத்தப்பட்டது.

குஞ்சுக்குளம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிகள் அனைத்தும் அண்மையில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், அக்கிராமத்திற்கான போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில், இம்மக்கள்  மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.பரீட் விடுத்த  வேண்டுகோளுக்கமைய, முருங்கன் மாவட்ட வைத்திய அதிகாரி ஒஸ்மன் சால்ஸ் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடமாடும் மருத்துவ சேவையை நடத்தினர்.

இதன்போது சுமார் நூற்றுக்கும் அதிகமான மக்கள் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொண்டு பயனடைந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X