2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

குஞ்சுகுளம் மக்களால் திருப்பி அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் மீண்டும் பகிர்ந்தளிப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 05 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை திருப்பி அனுப்பிய குஞ்சுகுளம் கிராம மக்களுக்கே அவை மீண்டும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மல்வத்து ஓயா வெள்ள நீர் பெக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட உலர் உணவுப்பொருட்கள் போதாமையினால் அப்பொருட்கள் திருப்பி மாவட்ட செயலகத்திடமே கையளிக்கக்கப்பட்டிருந்தன.

மேற்படி நிவாரணப் பொருட்களை பொறுப்பேற்ற மன்னார் ஆயர், அவற்றை அக்கிராம மக்களிடமே மீண்டும் பகிர்ந்தளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர கூறுகையில்,

'குஞ்சுக்குளம் கிராமமானது எவ்வித வெள்ளத்தினாலும் பாதிக்கப்படாத கிராமம் என்பதுடன் சுற்று நிருபத்தின் படி நிவாரணம் வழங்க முடியாத கிராமமாகும். தரை வழிப்பாதை தடைப்பட்டிருந்தமையை  கவனத்தில் கொண்டு ஏற்கனவே 23.12.2012 திகதி மடு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தினால் தேவையான உலர் உணவுப் பொருட்கள் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தும் முசலி மக்களுக்கு என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மீள் எழுச்சித்திட்டத்தினால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் எமக்கு கையளிக்கப்பட்டன.

இதன் போது அப்பொருட்களில் அரைவாசி பொருட்கள் குஞ்சுகுளம் மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் 27௧2௨012 கடல் மார்க்கத்தின் ஊடாக படகு மூலம் மாவட்ட செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டன.

ஏறக்குறைய 06 நாட்களின் பின்னர் வழங்கப்பட்ட பொருட்கள் முழுவதுமின்றி குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டும் மாவட்ட செயலகத்தின் முன் வாயிலில் அனாதரவாக வைக்கப்பட்டிருந்தன.

இச்செயற்பாட்டிற்கு குறித்த கிராமத்தின் பங்குத்தந்தை தலைமை வகித்ததை அறிந்த மன்னார் மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசப் ஆண்டகை மற்றும் குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகள் ஆகியோர் மாவட்ட செயலகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை வருகை தந்து பொருட்களை பார்வையிட்டனர்.

அத்துடன் 03 நாட்களுக்கு தேவையான அளவு பொருட்கள் வழங்கப்பட்டு இருந்ததை அறிந்து பொருட்களை இவ்வாறு மீள அனுப்பிய விடயத்திற்காக தனது மன வருத்தத்தை அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்களுக்கு தெரிவித்ததுடன் வாகனம் கொண்டு வந்து குறித்த பொருட்களை மீள கொண்டு சென்று உண்மையாக பாதிக்கப்பட்ட மடு பிரதேச மக்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X