2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் மன்னார் விஜயம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 11 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


மன்னாருக்கான விஜயத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்டுவந்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரி றொயிஞ்சோம், மன்னாரின் தற்போதைய நிலைமை தொடர்பில் மன்னார் நகரசபைத் தலைவர், உபதலைவர்களுடன் கலந்துரையாடினார்.

மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், செயலாளர் எஸ்.ஜே.குரூஸ், நகரசபையின்  உறுப்பினர்களான இரத்தினசிங்கம் குமரேஸ், அரச தரப்பு உறுப்பினர் டிலான் ஆகியோரை மன்னார் நகரசபையில் சந்தித்து
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரி றொயிஞ்சோம் கலந்துரையாடினார்.

மன்னார் மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,  மன்னாரிலுள்ள தமிழ், முஸ்ஸிம் மக்களின் நிலைமை, மீனவர்களின் பிரச்சினைகள் ஆகியவற்றுடன் மன்னாரில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன், மக்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரஜைகளின் பாதுகாப்புத் தொடர்பிலும் அவர் கேட்டறிந்துகொண்டார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் தற்போது அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சட்டவிரோத காணி அபகரிப்பு, பாகுபாடான வேலைவாய்ப்புக்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவரிடம், மன்னார் நகரசபையின் உறுப்பினர்கள் எடுத்துக்கூறினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X