2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வறுமையற்ற இலங்கையை உருவாக்குவோம் எனும் வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்

Super User   / 2013 ஜனவரி 16 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் திவிநெகும தேசிய திட்டத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'வறுமையற்ற இலங்கையை உருவாக்குவோம்' எனும் வேலைத்திட்டம் மன்னார் மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதீயூதின் தலைமையில் இடம்பெற்ற இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முத்தலீப் பாபா பரூக், ஹுனைஸ் பாரூக், மன்னார் மாவட்ட செயலாளர் சரத் ரவீந்திர உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மீன்பிடி, விவசாயம், கால்நடை, தொழில்நுட்ப ஆராய்ச்சி, கைத்தொழில் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு குறித்த திணைக்களங்களின் தலைவர்கள் விளக்கங்களையும் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X