2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மதுபானச்சாலையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஜனவரி 16 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹேமந்த்


கிளிநொச்சி, உருத்திரபுரம் – கூழாவடி பகுதியில் அமைந்திருக்கும் மதுபானச்சாலையை  அகற்றக் கோரி இன்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

உருத்திரபுரம் கூடாவடிப் பகுதியில் உள்ள விளையாட்டு கழக உறுப்பினர்களும் அயற் பிரதேச மக்களும் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளையாட்டுக் கழகத்திற்கு  இடைஞ்சலாக இருக்கும் மதுபானச்சாலையை அகற்றுமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை  தாம் நடத்துவதாக விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கரைச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

"1972 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 40 வருடங்களாக குறிப்பிட்ட இடத்தில் தமது கிளை நிலையம் இயங்கி வருவதாகவும் 1990 ஆம் ஆண்டுக்கு பின்னரே குறித்த இடத்தில் விளையாட்டுக்கழகம் உருவாகியுள்ளது.

அத்துடன், விளையாட்டு கழகத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இந்த கிளை நிலையத்தை நிறுத்துவதன் மூலமாக பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X