2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

மன்னாரில் அடைக்கலமோட்டை வாய்க்காலின் புனரமைப்பு வேலை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 18 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


மன்னார் - மதவாச்சி பிரதான வீதியிலுள்ள அடைக்கலமோட்டை வாய்க்காலை புனரமைக்கும் பணியை இராணுவத்தின் 542ஆவது படைப்பிரிவினர்  இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 13 கிலோமீற்றர்  நீளமுடைய அடைக்கலமோட்டை வாய்க்காலிலிருந்து வரும் நீரை பயன்படுத்தி இப்பகுதியிலுள்ள விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.

முருங்கன் கட்டுக்கரைக்குளத்துடன் தொடர்புடைய இவ்வாய்க்கால் யுத்தத்தின் பின்னர் பராமரிப்பின்றியுள்ளது. இதனால் குறைந்தளவு நீரே இவ்வாய்க்காலினுடாகச் செல்கின்றது.

இந்நிலையில், இவ்வாய்க்காலின் துப்பரவுப்பணியையும் புனரமைப்புப் பணியையும் இராணுவத்தின் 542ஆவது படைப்பிரிவு பொறுப்பேற்றுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X