2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக  நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 2 பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த 2 பேரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சட்டவிரோதமாக படகில் செல்வதற்காக இருந்தபோதே நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை இவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளதாக  தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .