2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வாக்காளர் அட்டைகளை இராணுவம் விலைக்கு வாங்குகின்றது: சிவசக்தி ஆனந்தன்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 18 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னிப் பிரதேசத்தில் பொதுமக்களின் வாக்காளர் அட்டைகளை இராணுவத்தினர் விலைக்கு வாங்குவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

கனகராயன் குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

கனகராயன் குளத்;திற்குட்பட்ட பெரியகுளப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் இராணுவத்தினா 1500 ரூபாவை கொடுத்து வாக்காளர் அடைகளைப் பெறுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

நாம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். பாமர மக்களை ஏமாற்றி பண ஆசையைக் காட்டி அவர்களை குழிக்குள் தள்ளப் பார்க்கின்றார்கள்.

மேலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் சில இடங்களில் தந்தை செல்வா, எம்.ஜி.ஆர்.யையும் தமது தேர்தல் பிரச்சார விளம்பரப் பதாகைகளில் பதித்து, தாமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என வாக்குக் கேட்கின்றார்கள் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .