2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மூன்று வாக்காளர்களுக்காக மூவர் பாதுகாப்பு

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பிரியந்த ஹேவகே
 
நாளை சனிக்கிழமை இடத்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கான வாக்களிப்பில் வாக்குச் சாவடியொன்றில் மூவர் வாக்களிக்கவிருக்கின்ற நிலையில் அந்த வாக்குச்சாவடிக்கு பாதுகாப்பாக மூன்று பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த வாக்காளர்கள் மூவருக்காக வவுனியா, கொகுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கே இந்த மூன்று பொலிஸாரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியா மாவட்டத்திலிருந்து 94,644 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்கள் வாக்களிப்பதற்காக 89 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  அத்துடன், இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 799பேர் வாக்களிப்பதற்காக மதவாச்சியில் வாக்குச்சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவிலிருந்து 150 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கொகுவில் கிராமத்திலுள்ள மூன்று வாக்காளர்களுக்காக அக்கிராமத்தில் வாக்குச்சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாக்குச்சாவடியின் பாதுகாப்புக்காக மூன்று பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .