2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

தேர்தல் அதிகாரி குளவி தாக்கியதில் பலி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தனம் கபில்நாத்

நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கின்ற தேர்தலுக்காக வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற அதிகாரிகளின் மீது குளவி கொட்டியதில் ஒருவர் பலியானதுடன் கடுமையாக பாதிக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் வவுனியார் புதுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. புதுக்குளம் மகா வித்தியாலயத்திற்கு சென்ற அதிகாரிகளின் மீதே குளவி கொட்டியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சம்பவத்தில் மாறம்பைக்குளம் மதினா நகர் பாடசாலையின் ஆசிரியர் ம.கிறிஸ்துராஜா என்பவரே மரணமடைந்துள்ளார். புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் அ.லோகேஸ்வரன், அதேபாடசாலையைச்சேர்ந்த ஆசிரியை து.ரஞ்சிதமலர் ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிப்பு நிலையத்தில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தவேளையில் பாடசாலை வளாகத்தில் மரத்திலிருந்த குளவிக்கூடே காற்றுக்கு கீழே விழுந்துள்ளது அங்கிருந்தவர்களை கொட்டியுள்ளது .

இதேவேளை பாடசாலை வளாகத்திற்கு உடனடியாக வருகை தந்த வவுனியா மாவட்ட மலோரியா தடை இயக்கத்தினர் குளவி கூட்டை இரசாயன மருந்தை தெளித்து அகற்றியுள்ளனர்.







  Comments - 0

  • ibnuaboo Friday, 20 September 2013 02:22 PM

    போதாக்குறைக்கு குளவியும் தன் பங்கை இத்தேர்தலுக்கு செலுத்தியுள்ளது. அரச சேவைக்காக தன்னை அர்ப்பணித்தவர்கள் போட்டியிடுபவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .