2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் கபே கண்காணிப்பாளர்கள் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

கிளிநொச்சியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தங்களுடைய கண்காணிப்பாளர்கள் இருவர் மீது தாக்குதல் நடதத்ப்பட்டுள்ளதாக கபே அறிவித்துள்ளது. அரசியல் கட்சியொன்றை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது கிளிநொச்சி பன்னங்கண்டிப் பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.

இன்று காலை 11.30 மணியளவில் இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு நிலவரங்களை பார்வையிடச் சென்றபோதே அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிறிதரன் எம்.பிக்கு பாதுகாப்பு வழங்கிய அதிகரிகள் அவரை பார்காப்பா அழைத்துவந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .