2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பெரும்போக நெற்செய்கை தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் இந்த முறை மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போக நெற்செய்கை தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னாரில் பெரும்போகச் செய்கைக்கான காலம் அண்மித்துள்ள நிலையில் அது தொடர்பான சாதக, பாதக நிலையை ஆராயும் பொருட்டு இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

மன்னார் உயிலங்குளம் பாடசாலையில் அந்த  மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இந்த முறை பெரும்போகச் செய்கையில் ஈடுபடவுள்ள  பெருமளவிலான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கட்டுக்கரைக்குளத்தின் சேமிப்பிலுள்ள சுமார் 6,300 ஏக்கர் அடி நீரை பயன்படுத்தி மன்னார் மாவட்டத்தில் சுமார் 24,438 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த முறை காலபோகச் செய்கை முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள்,  துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .