2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் சுகாதார பிரிவினரால் பண்டாரிகுளம் மாடாசாமி கோவில் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வெதுப்பகத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது என வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்தனர்.

சுகாதாரமற்ற முறையில் உணவுகளை  உற்பத்தி செய்வதாக மக்களினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கே. ஜீவராசா தலைமையிலான குழுவினர் கடந்த செவ்வாய்கிழமை திடீர் பிசோதனை மேற்கொண்டனர்.

இதன்போது பல பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன் நீதிமன்றத்திலும் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் குறித்த வெதுப்பகத்தை சீல் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு குறித்த வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .