2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பாதணிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் நகரசபைக்கு உட்பட்ட 8 பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு மன்னார் சர்வோதைய மாவட்ட இணைப்பாளர் எஸ்.உதயகுமாரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

போரின்பின் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கே இதன்போது பாதணிகள் வழங்கப்பட்டன.

மன்னார் சர்வோதையா அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  110 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்கத்திற்காண நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எம்.ஹேமமாலி பெரேரா மற்றும் அவருடன் சேவையாற்றும் பணியாளர்கள், மன்னார் நகரசபை உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாசன், மன்னார் பிரதேசசபையின் உப தலைவர் ஏ.சகாயம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .