2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

செல்வம் எம்.பி. இராஜினாமா?

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 04 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருக்கின்றது.

தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்திற்கு அமைச்சுப்பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக வன்னி மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப்பதவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டவனாக இருந்தாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய நிலை எனக்கு உள்ளது.
1998 ஆம் ஆண்டு தொடக்கம் வன்னி மக்கள் எமது கட்சியுடன்  இணைந்து செயற்பட்டு வந்தனர்.2013 ஆம் ஆண்டு வரை மக்கள் எமது கட்சிக்கு பெரும் ஆதரவு வழங்கி வந்துள்ளனர்.

ஆனால் அந்த மக்களின் எதிர்பார்ப்பான அமைச்சுப்பதவி வன்னி மாவட்டத்திற்கு கிடைக்காத நிலையில் அந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே இந்த மக்களுக்கு பெறுப்புக்கூறவேண்டிய தார்மீக பொறுப்பு என்னிடமுள்ளது.

எனவே தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளேன்.

இது தொடர்பில் சில தினங்களில் எனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளேன். என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .