2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடமாடும் சேவை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா நகரசபையினால் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு கோவில்குளம் சிறுவர் பூங்காவில் நடமாடும் சேவை நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

உள்ளூராட்சி வாரமானது 21 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் வவுனியா கோவில்குளம் பிரதேச மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக நடமாடும் சேவை வவுனியா நகரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள், வரி அறவீடு, நூலக சேவைகள், காணி தொடர்பான வரிச் சேவைகள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாக மக்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது சோலைவரிகளை நிலுவையின்றி நேர்த்தியாக செலுத்திய குறித்த பகுதியைச் சோந்த மக்களுக்கு மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.

கோவில்குளம் சிறுவர் பூங்கா வவுனியா நகரசபையால் கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தினருக்கு பராமரிப்புக்காக வழங்கப்பட்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த இளங்கோ அடிகளாரின் சிலைக்கும் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன், பிரதேச செயலாளர் கா.உதயராசா, மாவட்ட விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஏ.சகிலாபானு, சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சுரேந்திரன் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X