2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சவூதியில் இடம்பெற்ற விபத்தில் மன்னார் இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த  மன்னார், பெற்றாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலத்தை தாயகத்திற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். 

சவூதி அரேபியாவின் டமாம் நகரில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற விபத்திலேயே இவர் மரணமடைந்தார்.

குலசிங்கம் சுரேஸ் குமார் (வயது 28) என்பவரே விபத்தில் மரணமடைந்தார்.

2006ஆம் ஆண்டு  தொழில்வாய்ப்புக்காக சுரேஸ்குமார் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள நிலையில், அங்கு சாரதியாகவும் கடை ஒன்றிலும்  கடமையாற்றி வந்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X