2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மது வகைகள் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சட்டவிரோதமாக மதுபான வகைகளை விற்பனை செய்த வர்த்தகர்கள் நால்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நால்வரையும் மன்னார்; நீதவான்  ஆனந்;தி கனகரட்னம் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோது, மேற்படி நால்வரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில்,  சட்டவிரோதமாக கள்ளு விற்பனை செய்த இருவரில் ஒவ்வொருவருக்கும் 1,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

இதேவேளை, மதுபானம் விற்பனை செய்த ஒருவருக்கு 5,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

கள்ளு விற்பனை செய்த  மற்றுமொருவர் ஏற்கெனவே இதே குற்றத்தில் அகப்பட்டமையால் அவருக்கு 2,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

மன்னார் பகுதியில் கடந்த சில தினங்களாக மன்னார் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட திடீர்ச் சோதனையின்போது, சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த மேற்படி நால்வரும் பிடிபட்டுள்ளனர்.  பேசாலை, பணங்கட்டுக்கொட்டு,  கீரி ஆகிய கிராமங்களில் மன்னார் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X