2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத், சுப்பிரமணியம் பாஸ்கரன்,நவரத்தினம் கபில்நாத்

முல்லைத்தீவில் குண்டொன்று வெடித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள காணியிலேயே இந்த வெடிப்புச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு பி.டப்ளியு.டீ வீதியிலுள்ள முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்திற்கு பின்னால் உள்ள காணியிலேயே இந்த வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த காணியில் பொலிஸார் இன்று சிரமதானம் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது குப்பைகளை ஒதுக்கி தீ மூட்டும் போதே குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்துள்ளது. பழைய மோட்டார் குண்டே வெடித்;துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லையென தெரிவித்த முல்லைத்தீவு பொலிஸார் அருகிலிருந்த ராயப்பு தேவாலயத்திற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X