2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பூநகரியில் உணவுசார் உற்பத்தி நிலையம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் உணவுசார் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் ஒன்று நேற்றுமுன்தினம்  செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின் உதவியுடன் இந்த நிலையத்தை வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் திறந்து வைத்தார்.

இந்த நிலையத்தில் பால் சேகரிப்பு, பதனிடல் மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வில் புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஜோசேபி குறோசெற்றி, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம் ஹால்டீன், வடமாகாண கால்நடைத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X