2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பொதுநோக்கு மண்டபம் திறப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட உப்புமாவெளியில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபம் புதன்கிழமை (30) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அக்டட் நிறுவனத்தின் அனுசரணையோடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூக உந்துதல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இம் மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கும், மாலைதீவுக்குமான தூதுவர் டேவிட்டாலி இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த பொதுநோக்கு மணடபத்தை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம், கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் இ.குரபரன், அக்டட் நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் கரீத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X