2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முஸ்ஸிம்களை வெளியேற்ற சதித்திட்டம்: நகுசீன்

Super User   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொன்தீவு கண்டல் கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்படவிருந்த முஸ்ஸிம் மக்களை அங்கிருந்து வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் சதித்திட்டம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என மன்னார்  நகர சபையின் உறுப்பினர் என்.நகுசீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் நானாட்டான் பிரதேச செயலகத்தினால் குடியேற்றம் செய்யப்படவிருந்த முஸ்ஸிம் மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றுவதற்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த மக்கள் மீள்குடியேறி நானாட்டான் பிரதேச செயலாளரினால் காணிகள் பங்கீடு செய்யப்பட்டு வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்களை அவ்விடத்தை விட்டு வெளியேற்ற மாகாண சபை உறுப்பினர் ஒருவர் முயற்சி செய்து வருகின்றார்.

குறித்த காணி எங்களுடைய பூர்வீகம் அதனை விட்டு வெளியோறுமாறு கூறியுள்ளார். 1990ஆம் ஆண்டு விடுதலை புலிகளினால் விரட்டப்பட்டு மீண்டும் குடியேறிவரும் முஸ்ஸிம் மக்கள் 23 வருடம் கழிந்த நிலையில் மீண்டும் விரட்டப்படுவது விடுதலை புலிகளின் நடவடிக்கை போன்று செயற்படுவதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முஸ்ஸிம் மக்களை மீண்டும் குடியேறுமாறு  வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த மக்கள் விரட்டியடிக்கும் சம்பவங்களை அவர் முறியடிக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் வட மாகாணத்தில் இடம்;பெறும் என்;றால் மாகாண முஸ்ஸிம் மக்கள் நம்பிக்கை இழந்தே வாழ வேண்டும்.

கடந்த கால நிகழ்வுகளை மறக்க வேண்டும் என்றால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இடம்பெயர்ந்த முஸ்ஸிம் மக்களை வட மாகாணத்தில் மீண்டும் மீள்குடியேறுமாறு பகிரங்க அழைப்பு விடுக்க வேண்டும்.

மேலும் அந்த மக்களை அவர்களின் நிலத்தில் சுதந்திரமாக வாழவைக்க வேண்டும். இதைத்தான் இடம்பெயர்ந்த முஸ்ஸிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். முரண்பாடுகளை தோற்றுவிக்க சிலர் முயற்சி செய்துவருகின்றனர்.இதை தடுத்து நிறுத்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வர வேண்டும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X