2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

உழவு இயந்திரங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப் பணிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 01 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


உழவு இயந்திரங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் பணித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் தொடர்பிலேயே  அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் அவர் பணித்துள்ளார்.

மன்னார்  மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க  அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை  நடைபெற்றது.  இதன்போதே மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இவ்வாறு பணித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கத்தினால் சுமார் 100 உழவு இயந்திரங்களும் அதற்கான உதிரிப்பாகங்களும் வழங்கப்பட்டிருந்தன.  இவ்வாறு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள், பொருட்களின் பாவனை மற்றும் பராமரிப்பு தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக  மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளின் நலன்களை கருத்திற்கொண்டு  வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் பாவிக்கப்படாமல் இருக்குமானால் அது தவறு எனவும் அவர் கூறினார்.

எனவே, விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட சுமார் 100 உழவு இயந்திரங்களின் பாவனை, அதன் பராமரிப்பு, அதற்கு உரித்தான பொறுப்பாளிகள் தொடர்பில் முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை  சமர்ப்பிக்குமாறும் இந்தக் கூட்டத்தில் அவர் கூறினார்.

இது தவிர இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்  விவசாயிகளிடமும் உரிய அதிகாரிகளிடமும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கேட்டறிந்துகொண்டார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது திணைக்களங்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டங்கள் பற்றி  மேலதிக அரசாங்க அதிபரிடம் தெளிவுபடுத்தினர்.

விவசாயிகளின் பிரச்சினைகளை கவனத்திற்கொண்ட  மேலதிக அரசாங்க அதிபர், விவசாயிகளின் பிச்சினைகளுக்கான  தீர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X