2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வட மாகாண மீன்பிடி அமைச்சின் இணைப்பாளராக மயூரன் நியமனம்

Super User   / 2013 நவம்பர் 02 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராமி அபிவிருத்தி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளராக செந்தில்நாதன் மயூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனம் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராமி அபிவிருத்தி அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட நான், குறைந்தளவிலான வாக்குகளால் மாகாண சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்படவில்லை. எனினும் தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள மாகாண அமைச்சின் இணைப்பாளர் பதவியின் மூலம் பிரதேச மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை மேற்கொள்ளவுள்ளேன்.

எனது வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக கிராமங்கள் தோறும் குழுக்களை அமைப்பதன் மூலம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஓர் கிராமத்திற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளேன்.

மேலும் வன்னித் தேர்தல் தொகுதியில் டெலோ சார்பாக இரண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளேன். வட மாகாண அமைச்சுக்கான நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை செய்யமுடியும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X