2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

'மன்னாரில் தனியார் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை'

Super User   / 2013 நவம்பர் 03 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பஸ் கட்டண அதிகரிப்பிற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ள போதும் மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் இதுவரை கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்தவில்லை என குறித்த சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றத்தினை கருத்திற்கொண்டு ஏழு வீதத்தினால் பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. எனினும் மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் இது வரை கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்தவில்லை என அச்சங்கத்தின் தலைவர் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

" எமது மாவட்டம் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக காணப்படுகின்றது. மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் உள்ளனர்.

எமது சேவைகள் அதிகளவில் மீள்குடியேற்ற கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. -யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற வகையில் இதனை பரிசீலினை செய்து கட்டண அதிகரிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம்.

இது தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரனிற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். எனினும் அவரின் பதில் கிடைத்தவுடன் எமது கட்டண உயர்வை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம்

எமது பேருந்து உரிமையாளர்கள் பெரிதும் கஸ்;டத்தின் மத்தியில் எவ்வித இலாப நோக்கின்றி சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு அமைச்சர் இறுதி முடிவை எமக்கு வெகு விரைவில் வழங்க வேண்டும்.அதனை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்' என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X