2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 05 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பான செயலமர்வு  நேற்று திங்கட்கிழமை  நடைபெற்றது.

இதன்போது இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வது பற்றி தயாரிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

பெரும் மழையால் பாதிக்கப்படும் பிரதேசங்களில் அனர்த்தங்களை எதிர்கொள்வது எவ்வாறு என்றும் அதன் பாதிப்புக்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை,  கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு கணினி, பல்லூடக எறிகருவி, போட்டோ பிரதி இயந்திரம் ஆகியவற்றை வேள்ட்விஷன் நிறுவனம் வழங்கியது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபர் செல்லமுத்து சிறிநிவாசன்,  மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ உதவிப்  பணிப்பாளர் கு.சுகுணதாசன், பிரதேச செயலர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X