2025 ஜூலை 26, சனிக்கிழமை

மன்னார் விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான  கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை (26) காலை 9.30 மணிக்கு மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்போருக்குமான  இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக மன்னார் மாவட்ட பிரதி விவசாய விரிவாக்கல் பணிப்பாளர் பி.அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனும் கலந்துகொள்ளவுள்ளார்.

எனவே, இந்தக் கலந்துரையாடலில் அனைத்து விவசாய அமைப்பு மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கங்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X