2025 ஜூலை 26, சனிக்கிழமை

'வடக்கில் புலனாய்வாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'

Menaka Mookandi   / 2013 நவம்பர் 24 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'வடக்கில் தமிழ் மக்கள் மீதும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீதும் புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டு வரும் அடாவடித்தனத்தை உடன் நிறுத்த  அரசு துரித நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று(24) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை உட்பட மனிதாகிமான பணியாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு தொடர்ச்சியாக புலனாய்வுத் துறையினரினால் நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக காணாமல் போன உறவுகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கே குறித்த அச்சுருத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டே செல்லுகின்றன. இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தால் உரிய முறையில் விசாரணைகளை செய்வதில்லை என தெரிய வருகின்றது. இதனால் காணாமல் போன உறவுகளை கண்டு கொள்வதற்காக அவர்கள் மேற்கொண்டு வரும் அமைதிவழிப் போராட்டங்களைக் கூட கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த புலனாய்வாளர்கள் இரவு நேரங்களிலே விசாரணைகளுக்காக வீடுகளுக்கு செல்லுவதாக தெரிய வருகின்றது. இதனால் பெண்கள் பாரிய அச்சத்தை எதிர்நோக்குகின்றனர். விசாரணைக்காக வீடுகளுக்குச் செல்லுகின்ற போது பெண் பொலிஸார் அழைத்துச் செல்லப்படாமல் பெண்களை விசாரணை செய்கின்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டே செல்லுகின்றது.  இவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் எவ்வித சீருடையும் இன்றி சாதாரண உடையில் அரச புலனாய்வுத்துறை என சென்று விசாரணைகளை மேற்கொள்ளுகின்றனர்.

இதனால் அவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். எனவே வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் மீதும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீதும் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீதான இந்த சம்பவங்களுக்கு அரசே உரிய பதிலை கூறி இவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் உரிய கவனம் செலுத்த வேண்டும்' அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X