2025 ஜூலை 26, சனிக்கிழமை

ஏனைய மாகாணங்களை விட வட மாகாணம் சிறந்து விளங்கும்: டெனிஸ்வரன்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 24 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். ஜெகநாதன்

வடமாகாணம் எதிர்வரும் காலங்களில் ஏனைய மாகாணங்களை விட ஒரு சிறந்த மாகாணமாக திகழும் என வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் நொச்சிக்குளம் கிராம மாதர் அபிவிருத்திச் சங்கமும் நொச்சிக்குளம் ஆலய சபையினதும் ஏற்பாட்டில் அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு வரவேற்;பளிக்கும் வைபவம் ஒன்று நேற்று (23) சனிக்கிழமை நொச்சிக்குளம் பலநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், 'தமிழ், முஸ்லிம் என்ற பிளவுகள் இன்றி ஒரு சிறந்த தமிழ் பேசுகின்ற சமூகமாக வாழும் போதுதான் நிலையான அபிவிருத்திகளை செய்து தர முடியும்.

என்னால் முடியுமானவரை எனது மக்களின் தேவைகளை பாகுபாடின்றி வழங்குவதற்கும் நொச்சிக்குளம் ஆலயக் கட்டிடத்திற்கு இயன்றளவு உதவிகளையும், பேரூந்து நிழற்குடை அமைப்பதற்கான முயற்சியையும்  மேற்கொள்வேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X