2025 ஜூலை 26, சனிக்கிழமை

வடமாகாண சுகாதார அமைச்சர் - மன்னார் வைத்தியர்கள் சந்திப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 25 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்;திய கலாநிதி வி.சத்தியலிங்கத்திற்கும் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களுக்கும் இடையிலான சந்திப்பு  இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, மன்னார் மாவட்டத்தில் தற்போது சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இதன்போது அரசசார்பற்ற அமைப்புக்கள் சுகாதாரம் தொடர்பில் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஆர்.யூட், மாகாண சுதேச வைத்தியப் பணிப்பாளர் எஸ்.துரைரத்தினம், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.பரீட், மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X