2025 ஜூலை 26, சனிக்கிழமை

வவுனியா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட வயற்காணிகளை மீள கையளிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 26 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உஞ்சாற்கட்டி கிராமத்தில் இராணுவத்தால் கையகப்படுத்தபட்ட வயற்காணிகளை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதரர அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தெர்டுர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உஞ்சாற்கட்டி கிராம விவசாயிகள் மேற்படி தமது காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அமைச்சரும் ஏனைய வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், ம.தியாகராசா மற்றும் ஆர். இந்திரராஜா ஆகியோருடன் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு சென்று அப்பகுதிக்கு பொறுப்பான இராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து காணிகளை காணிச் சொந்தக்காரர்களுக்கு மீள கையளிக்க இராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது.

உஞ்சாற்கட்டி கிராமம் பழமைவாய்ந்த கிராமமாகும் இது நெடுங்கேணியிலிருந்து பல மைல்தூரத்தில் அமைந்துள்ள ஓர் எல்லைக்கிராமமாகும். 1983 காலப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேறி வேறு இடங்களில் குடியேறிவாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் இப்பகுதியிலுள்ள இவர்களது பூர்வீக காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு நெற்செய்கைக்காக தயார்படுத்தப்பட்டிருந்ததை விவசாயிகள் அமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நான் உட்பட ஏனைய மாகாணசபை உறுப்பினர்களும் பிரதேச செயலாளரும் விவசாயிகளும் அப்பகுதிக்கு சென்று உயர் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து இராணுவம் பிரதேச செயலாளரால் காணிச்சொந்தக்காரர்கள் என உறுதிப்படுத்துமிடத்து தாங்கள் காணிகளை விவசாயிகளுக்கு மீள கையளிப்பதாக என்னிடம் உறுதி வழங்கியுள்ளனர் என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X