2025 ஜூலை 26, சனிக்கிழமை

வவுனியா விபத்தில் வயோதிபர் பலி

Kanagaraj   / 2013 நவம்பர் 26 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, குருமன் காட்டுப் பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபரொருவர் பலியாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

குருமன்காடு கோவில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீதே வான் மோதியுள்ளது. வயோதிபர் வீதியில் வீழ்ந்ததுடன் சம்பவத்தையடுத்து வான் நிறுத்தாமல் தப்பிச்சென்றுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய வயோதிபரை அங்கிருந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு உடனடியாக் கொண்டு சென்றபோதிலும் அவர் இடைநடுவிலேயே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விபத்தில் பலியானவர் தொடர்பான விபரங்கள் தெரியவில்லை எனவும் வைத்தியசாலை வட்டடாரங்கள் தெரிவத்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X