2025 ஜூலை 26, சனிக்கிழமை

உயிலங்குளம் மக்களின் அடிப்படைத் தேவைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் : பிரதேச செயலர்

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு உயிலங்குளம் பகுதியில் இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்ட பொதுமக்களுக்கு படிப்படியாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருவதாக துணுக்காய் பிரதேச செயலர் ரி.குணபாலன் தெரிவித்துள்ளார்.

மேற்படி பகுதியில் குடியேறிய 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தமக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லையெனவும்இ இதனால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக பிரதேச செயலரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது,

உயிலங்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தில் இப்பிரதேசத்தில் காணிகள் இல்லாத மற்றும் விசேட தேவைகளுக்குட்பட்ட குடும்பங்களின் நன்மை கருதி முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டன.

ஆரம்பத்தில் குடிநீர்த் தேவை மற்றும் அடிப்படைத் தேவைகள் அதிகமாகவிருந்தன. இதனால் உடனடியாக குடிநீர்த்தேவைக்கு ஏற்ற கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

அதற்கு மேலாக அப்பிரதேச வீதிகள் சிரமதானங்களின் மூலம் துப்பரவு செய்யப்பட்டு ஒரளவு பயணிக்கக் கூடிய வகையில் காணப்படுகின்றன.
எல்லாத் தேவைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்யமுடியாதென்பதுடன்இ படிப்படியாக பூர்த்தி செய்யவே முடியும். அந்த வகையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X