2025 ஜூலை 26, சனிக்கிழமை

மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு இன்று சனிக்கிழமை காலையில் நடைபெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தச் செயலமர்வு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தின் இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விளக்கவுரைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X