2025 ஜூலை 26, சனிக்கிழமை

மருதமடுக்குள புனரமைப்புப் பணி முடியும் நிலையில்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பிலுள்ள  மருதமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் முடிவடையும் நிலையிலுள்ளது.

யுத்தம் காரணமாக 2008ஆம் ஆண்டு சேதமடைந்த இந்தக் குளத்தினை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில்,  2011ஆம் ஆண்டு 200 மில்லியன் ரூபா செலவில் இந்தக் குளத்தை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவுக் கட்டத்தினை அடைந்துள்ளன.

இந்தக் குளத்தில் சேகரிக்கப்படுகின்ற நீரின் மூலம் 4,000 ஏக்கர் பயிர்செய்கையினை சிறுபோகத்தின்போது மேற்கொள்ள முடியும் என்பதுடன், இதனால் 1000 விவசாய குடும்பங்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X